தீபாவளிக்கு வர்றோம்... மாஸ் காட்டிய அண்ணாத்த போஸ்டர்...

Annatha Sun pictures Superstar Rajinikanth
By Petchi Avudaiappan Jul 01, 2021 02:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் "அண்ணாத்த" படத்தின் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.