'' நாடி நரம்பு முறுக்க முறுக்க ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க '' : தெறிக்கவிடும் அண்ணாத்தே

AnnaattheFirstLook AnnaattheMotionPoster
By Irumporai Sep 10, 2021 01:25 PM GMT
Report

சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. தீபாவளிக்கு வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள அண்ணாத்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையே எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது.

வெற்றிப் படங்களின் இயக்குனர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக தயாராகிவரும் அண்ணாத்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி உள்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளன. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.



படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருப்பதால், படம் மீதான ஆவலை அண்ணாத்த திரைப்படம் மேலும் அதிகமாக்கியுள்ளது.