அடுத்த அன்னபூரணியாக அவதாரம் எடுத்த திருச்சி சாதனா - வைரலாகும் வீடியோ
அடுத்த அன்னபூரணியாக அவதாரம் எடுத்த திருச்சி சாதனாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அம்மனாக அவதாரம் எடுத்து சிக்கலில் சிக்கிக் கொண்டவர்தான் அன்னபூரணி. சமூகவலைத்தளங்களில் ஒரே நாளில் பிரபலமடைந்தார் அன்னபூரணி.
கடவுளாக மாறியதும், கையை தூக்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும் என சோஷியல் மீடியாவே ரகளையாக இருந்தது. ஆனால் அடித்த அடியில் அன்னப்பூரணி அவதாரம் கலைந்துபோய்விட்டது.
இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நேரத்தில், திருச்சி சாதனாவும் அம்மனாக களம் இறங்கினார். அடுத்து ஒரு அம்மனா என இணையவாசிகள் தயாராக அது கண்டெண்ட் இல்லாமல் செய்தது என சாதனாவே ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள சாதனா, ஒரு கூட்டத்தை நடிக்க வைத்துள்ளார்.
தானும் அம்மனாக நடித்து கண்டெண்டை அள்ளியுள்ளார். முழு எலுமிச்சை பழத்தை கடித்து திண்பதும், கண்களை உருட்டுவதும் என தன்னை அம்மனாகவே நினைத்துகொண்ட சாதனாவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
நீங்க சாமியா என கொந்தளித்த பலருக்கும் விளக்கம் அளித்துள்ள சாதனா, '' நான் சாமியெல்லாம் இல்லை. அன்னபூரணி தான் இன்றைய ட்ரெண்டிங்.
அதனால் கண்டெண்ட் கிடைக்காமல் நான் அந்த வீடியோ செய்தேன். எல்லாம் நடிப்புதான். யூடியூப் தான் எனக்கு வருமானம். அதற்காக செய்யப்பட்ட வீடியோ அது என்று தெரிவித்திருக்கிறார்.