‛ராமேஸ்வரம், காசி, திருப்பதி போறது வேஸ்ட்...’ - கடவுள் குறித்து பேசிய அன்னபூரணி - மீண்டும் கிளம்பிய சர்ச்சை
நானே கடவுள், நானே அவதாரம், நானே ஆதிபராசக்தி என்று பேசிய அன்னபூரணி அரசு அம்மா, ஊருக்கெல்லாம் பாதுகாப்பு வழங்குவேன் என்ற கூறி வந்த நிலையில், தனக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ஜனவரி 1ம் தேதி செங்கல்பட்டில், ஆன்மிக அருள் பயணத்தை மெகா பயணமாக தொடங்க இருந்த அன்னபூரணி, அந்த பயணம் தற்போது நிறுத்தியுள்ளார். அவருக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு கொடுத்ததையடுத்து, இனி ஆதிபராசக்தி என்கிற பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றும், அம்மா என்கிற பெயரை மட்டுமே பயன்படுத்துவேன் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 2021 அக்டோபர் 29ம் தேதி அவர் பேசிய வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இந்துக்களின் தெய்வ நம்பிக்கையை அவமதிக்கும் விதமான அவர் பேசியுள்ளார். இந்தியாவின் முக்கிய ஆன்மிக தலங்களான ராமேஸ்வரம், காசி, திருப்பதி சென்று வழிபாடு நடத்துவதை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதோ அந்த வீடியோ -