எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா - வெளியான புது அப்டேட்

car insurance annapoorni arasu amma
By Nandhini Dec 29, 2021 07:45 AM GMT
Report

தன்னை சாமியராக, அல்லது தானே கடவுளாக, அவதாரமாக, ரட்சகராக சொல்லிக்கொள்ளும் பலர், பெரும்பாலும் ஆடம்பரத்தை பொதுவெளியில் வைப்பதில்லை. ஆனால், நமது அன்னபூரணி அரசு அம்மா... கொஞ்சம் ஹைடெக்கானவர். அம்மாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அவர் வருவதே ஹோண்டா டபிள்யூ ஆர் வி காரில் தானாம்.

சிவப்பு நிற காரில், அவதாரமாய் வந்திறங்கும் அம்மா, கதவை திறந்து வந்ததும் பயபக்தியோடு, அவர் பாதங்களுக்கு மலர் தூவி அழைத்துச் செல்கிறது அன்பர் கூட்டம்.

பக்தர்களை பாத கமலத்தில் சரணடைய அழைத்த அம்மா, இப்போது சரணடைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இப்போது, அதில் வேறு என்ன புது அப்டேட் என, வலிமை அப்டேட்டை விட அதிக எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருப்பது அன்னபூரணி அரசு அம்மாவின் விவகாரத்தில் தான்.

அன்னபூரணி அம்மா பயன்படுத்தும் காருக்கு இன்சூரன்ஸ் முடிந்து,1 ஆண்டிற்கு மேல் ஆகியுள்ளது. இன்னும் அந்த இன்சூரன்ஸை அவர் புதுப்பிக்கவில்லை.

அன்னபூரணி பழனியப்பன் என்கிற பெயரில், 2019ல் அவர் அந்த காரை வாங்கி இருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2019 செப்டம்பர் 6 ம் தேதி, அந்த காருக்கான வாகன பதிவு நடைபெற்றுள்ளது.

HDFC ERCO GENETRAL INSURANCE CO LTD நிறுவனத்தில் அவர் காருக்கான காப்பீடு எனப்படும் இன்சூரன்ஸ் பதிவு செய்திருக்கிறார். 2020 செப்டம்பர் 4ம் தேதியோடு அந்த இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது.

இதனையடுத்து, அன்னபூரணி தனது காருக்கான இன்சூரன்ஸ் புதுப்பிப்பை மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல், குன்றத்தூரில் தான் அவர் வசித்து வந்திருக்கிறார். அங்கிருந்து தான், தனது காரில் பக்தகோடிகளை சந்தித்து வந்திருக்கிறார்.

கலர் கலர் புடவைகள், கொத்து கொத்தாய் நகைகள், தலை முதல் பாதம் வரை மலர்கள் என காஸ்ட்லி கடவுளாய் வலம் வந்த அன்னபூரணி அம்மா... காப்பீடு செய்ய மறந்துள்ளது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.