Saturday, Jul 12, 2025

சிவசங்கர் பாபா விட்ட இடத்தை பிடிக்க முயன்ற அன்னபூரணி அரசு அம்மா - முறிந்து போன திட்டம்

annapoorni-arasu-amma
By Nandhini 4 years ago
Report

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த சிவசங்கர் பாபாவின் சாம்ராஜ்ஜத்தை தன் வசமாக்க, அன்னபூரணி எடுத்த முயற்சி தான், இன்று அவரின் சம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆன்மீகத்தை முன்னிறுத்தி பல ஆன்மிகவாதிகள் ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களின் பலர், தங்களை கடவுளின் அவதாரமாக கூறுவார்கள்.

இன்னும் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆசிரமங்களும், ஆன்மிக அமைப்புகளும் முளைத்துக் கொண்டேதான் உள்ளது. அவற்றிக்கான இடமாகவே செங்கல்பட்டு மாறிவிட்டது. செங்கல்பட்டு கேளம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த சிவசங்கர் பாபாவின் ஆவர்த்தனம், சமீபத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

பள்ளி குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார் சிவசங்கர் பாபா. ஆசிரமமாக தொடங்கி, சாம்ராஜ்யமாக மாறிய சிவசங்கர் பாபாவின் சொத்துக்கள், இப்போதும் எண்ணிடலங்காதது. அவரை நம்பி கூடிய பக்தர் கூட்டம். அது தான் அவரின் முதலீடமாக மாற்றினார். சிவசங்கர் பாபா இல்லாததால், செங்கல்பட்டு மாவட்டத்தில், அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு பெருங்கூட்டம் நிற்கதியாய் தற்போது நின்றுக்கொண்டிருக்கிறது. அவர்களை தன்வசப்படுத்தி, தனக்கான கூட்டமாய் மாற்ற அன்னபூரணி தீட்டிய திட்டம், பெரிய சக்சஸ் ஆகவில்லை.

ஆயிரக்கணக்கிற்கு பதிலாக, நூற்றுக்கணக்கில் தான் பக்தர் எண்ணிக்கையை பெற்றிருந்தார் அன்னபூரணி. இந்த கடைகோடியில் இருந்தால், கடை வியாபாரம் ஆகாது என்பதை அவர் உணர்ந்தார். அதற்காக அவர் செய்த ஒர்க்அவுட்டில் , செங்கல்பட்டு தான் சரியான தேர்வு என முடிவு செய்தார்.

சிவசஙகர் பாபா விட்டுச் சென்றதை நாம் தொடரலாம் என்பதே அவரது எண்ணம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த இடத்தை விற்றுவிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலத்தை சுற்றியுள்ள பகுதியில் இடம் வாங்கி, புத்திய அத்தியாயத்தை தொடங்க முயற்சித்தார் அன்னபூரணி.

அவர் நினைத்த அனைத்தும் நன்றாகவே நடந்து வந்தது. அவர் எறிந்த பந்து, அவருக்கே தற்போது திரும்பி விட்டது. பழைய வீடியோ, அவரின் புதிய வீடியோக்களை நாசமாக்கிவிட்டது. சிவசங்கர் பாபா போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி, நவீன ஆதிபராசக்தியாக அமரலாம் என்கிற ஆசையை, அடியோடு பிடுங்கி புதைத்து விட்டது.

தொடங்கும் முன்பே முடிவை கண்டு முறிந்து போயிருக்கும் அன்னபூரணி அரசு அம்மாவுக்கு, சிவசங்கர் பாபாவின் இடம் மட்டுமல்ல, அவருக்கான இடத்தையே தக்க வைப்பது இனி கொஞ்சம் சிரமம் தான். 

சிவசங்கர் பாபா விட்ட இடத்தை பிடிக்க முயன்ற அன்னபூரணி அரசு அம்மா - முறிந்து போன திட்டம் | Annapoorni Arasu Amma