‛பில்லா மோதிரம்... அரபு வளையல்கள்...’ அன்னபூர்ணி அரசு அம்மாவின் மேக்கப் கலெக்ஷன்கள்
கடவுளின் அவதாரம் என்று கூறி, அருளாசி கொடுக்க புறப்பட்ட நேரத்தில் ‘சடன் ப்ரேக்’ போட்டு விட்டார்கள் அன்னபூரணி அரசு அம்மாவுக்கு. இதனால், உச்சகட்ட கடுப்பில் உள்ளார் அன்னபூரணி. சமூகவலைத்தளத்தில் அவரைப் பற்றி ஏதாவது ஒரு தகவல் கிடைக்காதா என்ற ஏக்கமும் சிலரிடம் உள்ளது.
இதற்கு காரணம் ட்ரெண்டிங்தான். ஈருடல், ஓர் சக்தி, ஓர் உடல், இரு சக்தி என்றெல்லாம் நிறைய விளக்கங்களை அளித்துள்ள அன்னபூரணி அம்மா நேற்றைய தன்னுடைய பேட்டியில் பல முகபாவங்களை கொண்டிருந்தார். கோபக்கார அம்மா, பாசக்கார அம்மா, பதுங்கும் அம்மா, பாயும் அம்மா என பல பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது, அன்னபூரணி அரசு அம்மாவின் உடை, நகை, அலங்காரம் குறித்த தகவல்கள் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு, ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பார்த்த அன்னபூரணிக்கும், தற்போது உள்ள அன்னபூரணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட தோற்றத்தில் அவர் மாறிவிட்டார் என்றே சொல்லலாம். குறிப்பாக அவரது உடை மற்றும் அலங்காரம் பெண்கள் பலரை கவர்ந்துள்ளது. குறிப்பாக ஆசி வழங்கும் அவரது கரங்களை பற்றியிருக்கும் வளையல்களை பற்றி அறிய பலருக்கு ஆவல் மிகுந்துள்ளது.
அன்னபூரணி அரசு அம்மா அணிந்திருக்கும் வளையல், அரபு ஸ்டைல் வளையல். வளைந்து, நெழிந்து, முறுக்கலான தோற்றத்தில் இருக்கும்.
அரபு ஸ்டைல் வளையல்கள் பெரும்பாலும், ஒன்றரை பவுனிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதாவது ஒரு வளையல் ஒன்றரை பவுன் அளவில் தொடங்கி, தேவைக்கேற்ப தயாரிக்கலாம்.
அந்த வகையில் பார்க்கும் போது, அன்னபூரணி அரசு அம்மா அணிந்திருக்கும் 4 வளையல்கள், குறைந்தது 6 பவுன் வரை கூட இருக்கலாம். அவர் கையில் அணிந்திருக்கும் இரு மோதிரங்கள், பேன்ஸி ரகம். ஒன்று பில்லா மோதிரம்.
அஜித் நடித்த பில்லா படத்தின் டைட்டில் லோகோவாக வரும் வடிவில் அது இருக்கும். மற்றொன்று வழக்கமான பேன்ஸி ரக மோதிரம். இது தவிர கழுத்தில் இரு செயின், காதில் தோடு, இடது கையில் பிரேஸ்லெட் என கொஞ்சம் நவீன, ஹைடெக் அம்மாவாக தான் அவர் வலம் வந்தார். வலம் வரவும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அதற்குள் அனைத்தும் பாழாகிப்போயிடுச்சு.