பயமுறுத்தாதீர்கள்... எனக்கு 3ம் இல்லை.. 4ம் இல்லை.. - கணவனைப் பற்றி மனம் திறந்த அன்னபூரணி

interview married life annapoorni amma
By Nandhini Dec 29, 2021 04:18 AM GMT
Report

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக சென்றுக்கொண்டிருப்பது அன்னபூரணி அம்மா. இவர் ஆதிபராசக்தி என்ற பல பெயர்களால் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று சந்தேகித்த நெட்டிசன்கள், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த அதே பெண்மணி தான் இந்த அன்னப்பூரணி என்பதை கண்டுபிடித்தார்கள். இவரை கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், அன்னபூரணி பேசியதாவது -

எல்லா மீடியாக்களும் என்னை மிரட்டுகிறார்கள். எங்களுக்கு பேட்டி தரவில்லை என்றால், நாங்கள் தவறாக தான் சித்தரிப்போம் என்று சொல்கிறார்கள். என் குழந்தைகள் என்னை ஆதிபராசக்தி என்று அழைத்தார்கள்.

இனி என்னை அவ்வாறு அழைக்கமாட்டார்கள். அம்மா என்றே அழைப்பார்கள். எனக்கு 3வது கணவர், 4வது கணவர் என்று கூறும் பெயர்கள் கூட யார் என்று தெரியாது. என்னை தேடி வரும் குழந்தைகளை கொச்சைபடுத்துகிறீர்கள். யாருடனும் தொழில் போட்டி போட நான் இங்கு வரவில்லை.

நான் வந்த நோக்கம் வேற. இங்கு ஆன்மிகம் தவறாக போய் கொண்டிருக்கிறது. நீங்க யார், உங்களை இயக்குவது எது, என்பதை உணர்த்தவே நான் வந்துள்ளேன். தாயாக தேடி வருபவர்களை அரவணைக்க நான் தயாராக இருக்கிறேன்.

தவறான கண்ணோட்டத்தில் எனக்கு வாட்ஸ்ஆப் அனுப்பாதீர்கள். நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. ரொம்ப என்னை தவறா பேசுவது, அவரவர் தாயை கொச்சைப்படுத்துவதற்கு சமம்.

அரசு உடன் வந்ததை கொச்சைப்படுத்தி, மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசாதீர்கள். அரசு மர்மமான முறையில் இறந்ததாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூட என்னிடம் இருக்கிறது. அதை நான் வழங்க வேண்டிய இடத்தில் வழங்குவேன். இதோடு அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இனி ஆதிபராசக்தி என்ற பெயரை பயன்படுத்தவே மாட்டேன். அம்மா என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

1ம் தேதி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். எந்த வழக்கும் என் மீது கிடையாது. இனி நடத்துவதாக இருந்தால், முறையாக அனுமதி பெற்று நடத்த இருக்கிறேன். எனக்கு மிக மோசமான வாட்ஸ்ஆப் எல்லாம் வருகிறது.

நான் தலைமறைவாக கிடையாது. என்னை யாரும் தேடவில்லை. செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு நான் போன் செய்து தெளிவுபடுத்தி உள்ளேன்.

இவ்வாறு அன்னபூரணி பேசியுள்ளார்.