‛என்னிடம் போனில் பேசினாலே வைபிரேஷன் அடிக்கும்...’ - அன்னபூரணி கூறிய அனுபவங்கள்!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக சென்றுக்கொண்டிருப்பது அன்னபூரணி அம்மா. இவர் ஆதிபராசக்தி என்ற பல பெயர்களால் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று சந்தேகித்த நெட்டிசன்கள், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த அதே பெண்மணி தான் இந்த அன்னப்பூரணி என்பதை கண்டுபிடித்தார்கள்.
2 நாட்களாக இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரை கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தாக்கி வருகின்றனர். இவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய இருப்பதால் இவர் தலைமறைவானதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், அவர் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் அவர் பல தகவலை பகிர்ந்தார். அந்த பேட்டியில் -
நீங்க கடவுளா என்று நிருபர் கேட்டதற்கு, அதற்கு அன்னபூரணி, மனுசன் கடவுளாக மாறவே முடியாதுங்க. கடவுள்னு ஒன்னு கிடையவே கிடையாது. ஒரு சக்தி தான் இருக்கு. அதை தான் இவங்க பல கடவுள்களா பிரிச்சுவச்சிருக்காங்க. என் குழந்தைகளில் இந்து, கிறிஸ்டின், முஸ்லிம் எல்லா மதத்தினரும் இருக்காங்க. காலில் பூ தூவது குறித்து கேட்டபோது, நீங்க உடலா பார்க்குறீங்க குழந்தைகள் அப்படி இல்ல.
தன்னை படைச்ச தாய்க்கு நன்றி விசுவாசத்துல தான் அப்படி பன்றாங்க. பூப்போடுங்கனு நா யாரையும் சொல்லல. அவங்க ஆசைப்பட்டு செய்றாங்க. நா எப்படி தடுக்க முடியும்? இங்க சாமி கடவுள் மதம் எதுவுமே கிடையாது.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கு. போன்ல இருக்கும்போதே ஒரு உணர்வுப்பறிமாற்றம் இருக்கும். நா பேசமாட்டேன். ஆனா லைன்ல இருக்கும்போதே ஒரு வைப்ரேசன் இருக்கும் எதிர்ல இருக்கவங்க அதை உணர்ந்துடுவாங்க.
இவ்வாறு கூறிய அவர், நான் தலைமறைவாகவில்லை. யார் என்னிடம் வரணுமோ அவர்கள் வந்து என்னை பார்க்கட்டும் என்று கிளம்பிச் சென்றார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
