அரசு இறந்த பின் நினைவாக சிலை வைத்த அன்னபூரணி - வெளியான அதிர்ச்சி தகவல்

annapoorni-amma
By Nandhini Dec 28, 2021 09:54 AM GMT
Report

அன்னபூரணி அரசு அம்மா குறித்த தகவலக்ள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கிறது. முதல் கணவரை உதறி, 2வது கணவராக அன்னபூரணி ஏற்றுக்கொண்ட அரசு, இறந்த பின், அவர் நினைவாக சிலை வைத்து அன்னபூரணி வழிபட்டு வந்ததாக அவரே கூறியுள்ளார்.

இருவரும் எங்களுக்குள் சக்தி இருப்பதை உணர்ந்து தான் இணைந்தோம்; அந்த சக்தி தான் எங்களை பயிற்று வித்தது; எங்களுக்குள் செயல்பட்டது.

பின், அரசு உடலை அந்த சக்தி எடுத்துக் கொண்டது. அவருக்குள் இருந்த சக்தி, என்னுள் இருந்த சக்திக்குள் ஒன்றிணைந்து , ஒரே சக்தியானது. பின் அந்த சக்தி, பலரை மகிழ்விக்க, அவர்கள் குழந்தையாய், நான் தாயாய் மாற வைத்தது, என்றும் பேட்டியில் அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் தொண்டமநல்லூர், தாதன்குப்பன் பகுதியில் பகுதியில் அரசு சிலை வைக்கப்பட்டு, அங்கு அன்னபூரணி வழிபாடு நடத்தி வந்த தகவல் வெளியானது. 

தற்போது அந்த அரசு சிலை இருந்த இடம் தரிசாக உள்ளது. தரிசு நிலத்தில் ஒரே ஒரு சின்ன கட்டடம் இருந்தது.

அங்கு தான் அரசு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அன்னபூரணியால் பூஜிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த கட்டிடத்தில் பீடம் மட்டுமே இருந்தது. சிலை பெயர்க்கப்பட்டு வெறும் உடைந்த பீடமே இருந்துள்ளது.

அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து கூறும்போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. அரசு இறப்பிற்குப் பின் அன்னபூரணி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் அரசு சிலை மீது வெறுப்பில் இருந்ததாகவும், அவர் தான், அந்த சிலையை உடைத்து பெயர்த்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின் அன்னபூரணியும் அங்கு வருவதை தவிர்த்துவிட்டார் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். 

அரசு இறந்த பின் நினைவாக சிலை வைத்த அன்னபூரணி - வெளியான அதிர்ச்சி தகவல் | Annapoorni Amma

அரசு இறந்த பின் நினைவாக சிலை வைத்த அன்னபூரணி - வெளியான அதிர்ச்சி தகவல் | Annapoorni Amma