யார் இந்த ஆதிபராசக்தி அம்மா என்ற அன்னபூரணி? போலி சாமியாரா..!
ஆதி பராசக்தி அம்மா என்ற பெயரில் பெண் ஒருவரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.யார் அந்த பெண் அவரின் பின்னனி என்ன? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழகத்தில் மூளைக்கு மூளை தோன்றும் புதிய சாமியார்களை மக்கள் அவர்களை கடவுளின் அவதாரமாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.
சிவனின் அடையாளம் எனக் கூறிக்கொள்ளும் நித்தியானத்தா என்ற ஒருவர் கைலாசா என்ற புது நாட்டையே உருவாக்கி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானோர் விரதம் இருந்து பாதயாத்திரை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நான் தான் ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொள்ளும் பெண்ணின் வீடியோ காட்சிகள் மற்றும் அவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆதிபராசக்தி அம்மா என்று அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கையில் அமர்ந்தவாரு அருள் வழங்கும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
அன்னபூரணி என்ற பெயர் கொண்ட அந்த பெண்மணி பல ஆண்டுகளாக அருள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண் மாலைகள் அணிந்து பட்டுப்புடவையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு பின்புலத்தில் பக்தி பாடல்கள் ஒலிக்க பக்தர்களை நோக்கி கைகளை உயர்த்துகிறார்.
சகுனி படத்தில் நடிகர் நாசர் சாமியார் வேடத்தில் இப்போலாம் எப்போ பேசுவேன் என்று அனைவரும் காத்துகிடப்பதாக கூறும் காட்சிகளை போன்று அன்னபூரணி அம்மா எப்போ பேசுவார் என்று அவரது பக்தர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
இவரிடம் ஏதோ பவர் இருப்பதாகவும் அதன் மூலம் மக்களின் நோய்களையும்,கஷ்டங்களையும் குணப்படுத்தி வருவதாகவும் அவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அவர் யார் எங்கிருந்து வந்தார்?அவர் எப்படி ஆதிபராசக்தியின் அவதாரமாக மாறினார் என்ற விவரங்கள் இது வரை வெளியாகவில்லை.
ஆனால் இவர் பல வருடங்களாக அருள் வழங்கி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது டிரெண்டாகி வருவதற்கு காரணமும் அம்மா மனது வைத்த தால் தான் என அவரது சிசியர்கள் கூறுகின்றனர்.
இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் தகாத உறவால் மாட்டியவர் என்றும் அவர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின் வீடியோக்களும் சமூக வளைதலங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இணைய வாசிகள் பலரும் ஆதிபராசக்தி அம்மா என்ற அன்னபூரணி குறித்து தங்கள் கருத்துக்களையும் புகைப்படங்களையும் சமூக வளைதலங்களில் தெரிவித்து வருவதால் இந்த வருடத்தின் கடைசி நாட்களின் பேசு பொருளாக மாறியிருக்கிறார்.