Sunday, May 11, 2025

இந்த உலகமே எதிர்த்து நின்னாலும்..சத்தியம் ஒருக்காலும் தோற்காது..அன்னபூரணி

Video New Annapoorani Arasu Amma Year 2022
By Thahir 3 years ago
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வளைத்தல பக்கங்களில் மிகவும் வைரலானவர் பெண் சாமியார் அன்னபூரணி.

இவர் தனியார் தொலைக்காடசி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மையில் கடந்த 2013ஆம் ஆண்டு பங்கேற்றார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வளைதலத்தில் தான் ஆதிபராசக்தி அவதாரம் என்று கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அன்னபூரணி குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் அன்னபூரணி தன் மீது ஊடகங்கள் அவதூறு பரப்புவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் கூறி புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

இந்நிலையில் அவர் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தன்னை சிலர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியிருப்பதாகவும் அதை விரைவில் தெரியப்படுத்துவதாகவும் கூறினார்.

மேலும் அவர் இந்த உலகமே எதிர்த்து நின்னாலும்..சத்தியம் ஒருக்காலும் தோற்காது என தெரிவித்துள்ளார்