காவல் ஆணையரிடம் புகார் அளித்த பெண் சாமியார் அன்னபூரணி
தனது நற்பெயருக்கு கலங்கும் ஏற்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து என்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் யூடியூப் சேனல்கள் அவதுாறு பரப்புவதாகவும்,
இறந்து போன தனது கணவர் குறித்தும் தன் மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக அவதுாறுகளை பரப்பி வருவதாகவும் இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக புகார் காவல் ஆணையரிடம் அன்னபூரணி புகார் அளித்துள்ளார்.
தன்னுடைய ஆன்மீக சேவையை தடுக்கும் வகையில் சிலர் செயல்படுவதாகவும் தன்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் சிலர் தன்னை மிரட்டுவதாகவும் தன்னுடைய ஆன்மீக சேவையை தடுப்பதற்கு சதித்திட்டம் தீட்டுவதாகவும் தன்னுடைய சீடர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்னபூரணி மீது 5 இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரில் மத நம்பிக்கையை இழிவு படுத்தும்விதமாகவும் துண்புறுத்தும் வகையில் செயல்படுகிறார் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் அன்னபூரணி முகவரியை மாற்றி மாற்றி போலீசாரிடம் இருந்து தப்பி வருவதாக கூறப்பட்ட நிலையில் தீடீரென காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.