தரிசன இடத்தை மாற்றிய அருள்வாக்கு அன்னபூரணி...நடந்தது என்ன?
அண்மையில் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார் அருள்வாக்கு அன்னபூரணி.
விலை உயர்ந்த பட்டுப்புடவைகள்,தங்க நகைகளுடன் திடீரென வலம் வந்தவர் தான் இந்த அன்னபூரணி. சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகவே யார் இவர் என்பதை மக்கள் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
அப்போது தான் தெரிந்தது.இவர் மற்றொரு பெண்ணின் கணவருடன் தொடர்பு வைத்திருந்ததும் இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லொம் உண்மையில் பங்கேற்றதும் தெரியவந்தது.
கண்டென்ட் கிடைக்காத என சுற்றி வரும் இளசுகளுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்களுட் ஹாட் கண்டென்ட் ஆனார் அருள்வாக்கு அன்னபூரணி.
தன் ஆதரவாளர்களை சந்திக்கும் போது வைப்ரேஷன் ஆசி வழங்குவது இவரின் தனி சிறப்பு. சாந்தமான குரல்களில் சைலன்ட்டாக இருந்து வந்த அன்னபூரணி ஆதரவாளர்களை தக்க வைத்து தனது அதிகாரத்தை சாந்தமாக காட்டி வந்தார்.
இந்தநிலையில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி அன்னபூரணி தன் ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் தன்னை காண வருதற்கான தரிசன நுழைவு கட்டணம் ரூ.700 என்று நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களும் ஆர்வமாக நுழைவுக்கட்டணம் செலுத்தினர்.
இதனிடையே அருள்வாக்கு அன்னபூரணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் தரிசனம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நுழைவு கட்டணம் செலுத்திய உங்களுக்கு தரிசனம் நடைபெறும் இடம் குறித்த தகவல் உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
மேலும் அவர் சமூகவலைதள பக்கங்களில் என்னை பற்றி தவறான வதந்திகள் பரப்பி விட்டு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கவிருந்த ஆசிரமத்திருக்கு அழுத்தம் கொடுத்து நிர்பந்தம் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த காலமும் இல்லாமல்,வரும்காலமும் இல்லாமல்,நிகழ்காலத்தில் எப்படி வாழ்வது என்று வாழ கற்றுக்கொடுத்து வருவதாகவும், என்னை அருள்வாக்கு சொல்வதாகவும் எல்லோரும் கூறுவதாக ஆவேசமடைந்தார்.
என்னுடைய டிவைன் பவரால் அனைவரையும் ஜீவன் முக்தி நிலையில் நிலைபெற வைப்பதாக கூறிய அவர் திடீரென ஆன்மிகம் என்றால் என்னவென்று தெரியுமா என்று கோபமுற்றார்.
நான் சத்தியத்தை பேசி வருவதாகவும்,இதுல என்ன மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க சொல்லுங்க..! என்று கேள்வியை தொடுத்தார்.
அண்மை காலமாக அமைதியாக இருந்து வந்த அன்னபூரணி மீண்டும் தற்போது தன் வீடியோ மூலம் அனைவருக்கும் கண்டென்ட் கொடுத்து டிரெண்டாக நினைப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.