Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம்: உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம்
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தமிழகத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை விலகிய நிலையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியவுடன் We The Leaders என்ற அரசியல் இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார்.

தன்னார்வ அமைப்பாக செயல்படும் இந்த இயக்கம் விரைவில் கட்சியாக உருவெடுக்கும் என்றும் வருகிற பொதுத்தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மாநில தலைவராக பொறுப்பு வகித்த போது தனக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார், உள்துறை அமைச்சம் இக்கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாதுகாப்பு திரும்ப பெறப்படும்.