புனித நுாலான குர்-ஆனை பக்தியுடன் வாங்கி கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்ட அண்ணாமலை..!
காரைக்குடி செக்காலை சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே "என் மண் என் மக்கள்" நடை பயணத்தின் போது இஸ்லாமியர் ஒருவர் வழங்கிய புனித நுாலான குர்-ஆனை பக்தியுடன் வாங்கி கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்டார்.
நல்லதொரு மாற்றம் வர வேண்டும்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி பெரும் மாற்றங்களை செய்துள்ளார் என பெருமிதம் கூறினார்.
இந்த நடைபயணம் மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக தான் கருதுவதாக குறிப்பிட்ட அவர், இந்த பயணத்தின் மூலம் நல்லதொரு மாற்றம் வர வேண்டும் என்பதே தங்களது நோக்கி என குறிப்பிட்டார்.
வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என இலக்குடன் பயணித்து வருவதாக கூறி, மோடியின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை காணமுடிகிறது என்று கூறினார்.
குர்-ஆனை கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்ட அண்ணாமலை
இந்த நிலையில், முன்னதாக காரைக்குடி செக்காலை சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே "என் மண் என் மக்கள்" நடை பயணத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய இளைஞர் ஒருவர் புனித நுாலான குர்-ஆனை வழங்கியுள்ளார்.
அப்போது அந்த இஸ்லாமியரிடம் குர் ஆனை வாங்கி கொண்ட அண்ணாமலை பக்தியுடன் கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்டார்.