நீட் குறித்து விஜய்யின் கருத்து...நான் வரவேற்கிறேன்!! பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
கட்சி நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் பேசியது வருமாறு, இன்று மாலை 6 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாளை முழுவதும் விக்ரவாண்டியில் தான் இருக்கிறோம்.
ஆளும் கட்சியின் அத்துமீறல் அதிகமாக இருக்கும். இந்தியாவில் 90% ஆளும் கட்சி தான் ஜெய்கிறார்கள். 8, 9 அமைச்சர்கள் இருக்கிறார்கள். வெட்டி சேலை போன்றவற்றை பிடித்திருக்கிறார்கள். இருப்பினும் இம்முறை விக்கிரவாண்டியில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
தேர்தலில் ஒரு கட்சி தைரியமாக நிற்கணும். நிற்காத கட்சி என அதிமுகவை சுட்டிக்காட்டி யாருக்கு வாக்களிக்க வேண்டும் கூடாது என்ற பிரச்சாரத்தை சமூகவலைதளத்தில் செய்கிறார்கள். 3-4 இடங்களுக்கு செல்வோம் என்று தான் அவர்கள் போட்டியிடவில்லை. அ டீம் என்ற திமுக வெற்றி பெறவே பி டீம் என்ற அதிமுக விலகி நிற்கிறது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும். எதிரொலிக்கணும். இது சாதாரண மரணம் அல்ல - கள்ளச்சாராய கொலை. அனைவர்க்கும் கருத்துக்கள் உள்ளது.
நீட் குறித்து அவரின் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அதில் பிரச்சனையில்லை. நீட்டின் தேவை வலிமையாக வைத்துள்ளோம். ஆதாரத்தின் அடிப்படையில் நீட் இருக்கிறது.
வரவேற்கிறேன்
சட்டப்பேரவையில் திமுக 3 முறை நீட் எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. அதில் வெள்ளை அறிக்கை ஏன் இல்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கருத்தை தெரிவிப்பதற்கு முன்பு scientific data வைத்து பேசணும். பாஜகவை எதிர்க்கணும் என்பதால் தான், நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
விஜய் அவர்கள் திமுக சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுத்தால், நாங்கள் தனித்து நிற்போம் சந்தோசம். எங்களின் அரசியல் தனியாக இருக்கும். 2026'இல் நான்கு முனை போட்டி வரும் போது 25% வாக்கு பெற்றுவிட்டால் வென்று விடாமல்.
இப்பொது 3 மொழி கொள்கை வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள், நிறைய மக்கள் நீட் வேண்டும் என்கிறார்கள்.அவர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். அரசியல் கட்சி தலைவராக விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன். எங்களுக்கு அது நல்லது. ஆனால், அவர் data வைத்து பேசினால் சிறப்பாக இருக்கும்.
கல்வி கொள்கை
புதிய கல்வி கொள்கையில் தான் மும்முனை மொழி கொள்கை கொண்டுவரப்பட்டது. 2020 வரை ஹிந்தி கட்டாயமாக தேசிய கல்வி கொள்கையில் இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. இந்தியை இல்லாமல் வேறு ஒரு மொழியை கூட 3-வது மொழியாக படிக்கலாம்.
விஸ்வகர்மாவை குலக்கல்வி என்கிறார்கள். தமிழக அரசு கல்வி கொள்கையில் மீனவ பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு அது குறித்தான படிப்பினையும் வழங்கப்படும் என உள்ளது. இது எப்படி? மாநில அரசின் மக்கள் கொள்கையை தீர்க்கமாக பார்க்கணும். அரசியலுக்காக 2 விஷயங்களை எதிர்த்து விட்டு, அரசியல் செய்கிறார்கள்.
லுங்கி கட்டி பேசும்
ஜெயக்குமார் அரசியலில் படிக்காமல் இருந்தால் எப்படி இருப்பாங்க என்பதற்கு ஜெயக்குமார் ஒரு எடுத்துக்காட்டு. அவர்களை போல, ஒரு வெள்ளை வெட்டி சட்டை போட்டுட்டு, யாரோ நாமம் வாழ்க கூறிக்கொண்டிருப்பவர்களால் தான் அரசியலுக்கு பீடை பிடித்துள்ளது. சொந்த தொகுதியில் அமைச்சராக இருந்தவரின் மகன் டெபாசிட் போய்டுச்சு. இவரெல்லாம் பேசலாமா?
நாம சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது.எனக்கு படிக்க புடிக்கிறது நான் போகிறேன். தமிழக மக்கள் அதனை எதிர்பார்க்கிறார்கள். அதிமுகவை அழிப்பவர்களில் முக்கியமானவரே அவர் தான். காலையில லுங்கி கட்டிட்டு ஒரு பேட்டி, மாலை மறுபடியும் ஒரு பேட்டி ஒவ்வொரு பேட்டியிலும் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. நான் கட்சியில் இல்லை என்கிறார்,
நான் எங்கு இருந்து பேசுறேன். அதிமுக தலைவர்கள் வேண்டிக்கொள்கிறார்கள் என்னை வெளியில் வைத்து விட வேண்டும் என்று. எங்கையும் நான் போகப்போறதில்லை. அவர் எவ்வளவு சாமியை வேண்டுமென்றாலும் கும்பிடட்டும்.
சு.வெங்கடேசன் நல்ல கதையாசிரியர். காலம் கம்யூனிஸ்ட் கட்சியை டெபாசிட் இல்லாத கட்சியாக கொண்டுவந்து விட்டது. செங்கோலை எதிர்ப்பவர், ஏன் மதுரை மேயர்க்கு செங்கோல் பரிசளித்தார்.
சு.வெங்கடேசன் மீது எழுத்தாளராக மதிப்புள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக அவர் பேசுவது பொய்யாக உள்ளது. ஆர்.எஸ்.பாரதிக்கு யார் மணி கட்டுவது என பார்த்து பார்த்து நானே கோர்ட்டில் வழக்கில் ஒன்று கொடுத்துவிட்டேன்.
வழக்கு...
கள்ளக்குறிச்சிக்கு நானே காரணம் என்றார். வரும் செவ்வாய் நானே வழக்கு தொடுகிறேன். இது எங்கு முடிகிறது என்று பார்க்கலாம். இல்லனா, அவர் அடுத்து நாள் ஏதேதோ பேசுகிறார். இவர்கள் BA பற்றி எதோ உதயநிதி பட்டம் வாங்கியது போல பேசுகிறார்கள்.
உதயநிதி எந்த காலேஜ் போனார். இவர் மைக் எடுத்து BA வாங்கியவர்கள் நாய் என்கிறார். ஒரு காலத்தில் மேயருக்கு அதிக மதிப்பு இருந்தது. கோவையில் ஒரு இடத்தில் 300 ஓட்டு அதிகமாக வாங்கிவிட்டார்கள் என மேயர் மீது குற்றசாட்டுகள். மொத்தமாக திமுகவே சரியில்லை.
அனைவருமே நீக்கணும்.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மேயரையும் நீக்கிடணும். இது எனது அன்பான வேண்டுகோள்.
தீபாவளிக்கு டெட்ரா பாட்டில் மதுவா? இது பெரும் ஆதங்கம். மக்கள் இதனை பார்த்து வாக்களிக்கணும்.