அறிவாலய அரசுக்கு இந்த பாடம் தேவை தான் - கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

annamalai maridoss மாரிதாஸ் பாஜக அண்ணாமலை
By Petchi Avudaiappan Dec 14, 2021 04:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. ஆதரவாளரும், யூடியூபருமான மாரிதாஸ் என்பவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தை வைத்து காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி இருந்தார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்ததாக டி.வி.எஸ். நகரை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணியன் என்பவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

அதன் பேரில் நடவடிக்கை எடுக்க புதூர் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அதை தொடர்ந்து மாரிதாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் வழக்கு குறித்த விவரங்களை தெரிவித்து கைது செய்வதாக தெரிவித்தனர். பின்னர் புதூர் போலீசார் அவரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை எதிர்த்து மாரிதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி மனு தாக்கல் செய்தார்.இந்த நிலையியல் யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர், 'சகோதரர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

தமிழ்நாடு பாஜக இந்த தீர்ப்பை வரவேற்பது மட்டுமில்லாமல், தேசியம் பேசக்கூடிய அனைத்து குரலுக்கும் உறுதுணையாக இருக்கும். அறிவாலய அரசு நல்ல பாடத்தை கற்று இருக்கும் என்றும் நம்புகின்றேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.