உதயநிதி ஸ்டாலின் ஒரு 'பிளே பாய் ': பாஜக அண்ணாமலை கிண்டல்
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகே ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் புரிந்து கொண்டவர் காமராஜர்
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அண்ணாமலை, “திமுகவினர் கொள்ளைபுறமாக வருவது வழக்கம். அப்படித்தான் அன்னூர் பகுதியில் 3867 ஏக்கர் நிலத்தை சிப்காட்டிற்கு எடுப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளனர்.
திமுகவினர் வியாபாரம் செய்ய, அரசியல் இலாபம் பெற சென்னை வந்தவர்கள். சொந்த உழைப்பில் சம்பாதித்து சாப்பிட்டு இருந்தால் மானம், ரோசம் இருக்கும். அது விவசாயிகளிடம் உள்ளது. விவசாயிகள் பற்றி புரிந்து கொண்டவர் காமராஜர் மட்டுமே.

பிளேபாய்
அணை கட்டி பல இடங்களில் விவசாயிகளை வாழ வைத்தவர். பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட உள்ளனர். 80 வயது ஆனாலும், 80 படம் எடுத்தாலும், 8 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் பிளே பாயாக தான் இருப்பார்.
மகன் படம் எடுப்பது குறித்து தான் முதலமைச்சர் அக்கறை காட்டுகிறார். விவசாயிகள் பற்றி முதலமைச்சர் கவலைப்படவில்லை. படத்தில் நடிக்க அவர் காக்கி சட்டையை வாடகைக்கு எடுத்து போட்டார்.
நான் பத்தாண்டுகள் காவல் துறையில் வேலை செய்தவன். காக்கி சட்டை அணிய தகுதி வேண்டும். படம் நடித்தால் மக்கள் காவலனாக கனவில் மட்டுமே ஆக முடியும். ஆடிக்காரை வைத்து கொண்டு திமுக கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு டெல்லிக்கு சென்று போராடும் விவசாயிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.