அண்ணாமலைக்கு பாடம் எடுத்த இந்திய தேர்தல் ஆணையம் - இணையத்தில் வைரலாகும் பதிவு

DMK BJP annamalai urbanlocalbodyelection2022 tnelectioncommission indianelectioncommission
By Petchi Avudaiappan Feb 21, 2022 04:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று வாக்களித்தனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேசமயம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்ததாக திமுக அரசு கூறிவருகிறது. ஆனால் வாக்குப்பதிவு நாளில் தமிழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை இந்தக் காணொலி காட்டுகிறது. தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தினத்திலாவது தனது கண்களை மூடிக்கொண்டிருக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோவுடன் இந்திய தேர்தல் ஆணையத்தை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டார். 

அண்ணாமலையின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை. நீங்கள் அணுகவேண்டியது எங்களை அல்ல. அது தொடர்பான புகார்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தை அணுகவும் என தெரிவிக்க இணையவாசிகள் சரமாரியாக இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.