இந்திய வரலாற்றில் மக்கள் மீது கல் வீசிய அமைச்சர் : அண்ணாமலை கிண்டல்

DMK BJP K. Annamalai
By Irumporai 1 வாரம் முன்

இந்திய வரலாற்றில் ஒரு அமைச்சர் மக்கள் மீது கல் எறிவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 கல் எறிந்த அமைச்சர்

பால்வளத் துறை அமைச்சர் நாசர், தொண்டர் ஒருவரிடம் உட்காருவதற்கு நாற்காலியை எடுத்துவர சொன்னார். அப்போது நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர், கட்சி தொண்டர்களை ஒருமையில் பேசியதுடன், அவர்கள் மீது கல்லை தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் மக்கள் மீது கல் வீசிய அமைச்சர் : அண்ணாமலை கிண்டல் | Annamalai Tweet About Nasar Video

 அடிமைகளைப் போல் நடத்துவதுதான் திமுக

அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டித்து வரும் நிலையில் அமைச்சரின் வீடியோவை பதிவிட்டுள்ள அண்ணாமலை இந்திய வரலாற்றில், ஒரு அமைச்சர் மக்கள் மீது கல் எறிவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?.

அதுவே திமுக அமைச்சர் நாசர், விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுவது கண்ணியம் இல்லாத செயல், அமைச்சருக்கு இது அழகு இல்லை. மக்களை அடிமைகளைப் போல் நடத்துவதுதான் திமுக” எனக் குறிப்பிட்டுள்ளார்.