பாஜக சித்தாந்தத்தை வீடு வீடாக கொண்டு செல்வோம் - அண்ணாமலை சூளுரை

Bjp Annamalai ips Tn bjp
By Petchi Avudaiappan Jul 09, 2021 05:01 PM GMT
Report

பாஜகவின் சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து டிவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ள செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைமை வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக, தமிழ்நாட்டில் மூத்த தலைவர்கள் வழிகாட்டுதலுடன் ஒரே அணியாக ஒன்றிணைந்து நடப்போம் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் பாஜகவின் சித்தாந்தத்தையும், தேசப் பற்றையும் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓய மாட்டோம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.