40 ஆயிரம் கேமரா வைத்திருந்தால் என்ன மீடியாவா? : அண்ணாமலை பேச்சுக்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்
கமலாலயம் வந்தால் மட்டும் செய்தியாளர்களுக்கு துணிச்சல் வந்துவிடுகிறது , திமுக தலைவர் ஸ்டாலினிடம் இதுபோல கேள்வி கேட்பீர்களா? என செய்தியாளர்களை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை கேள்வி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களிடம், யாராக இருந்தாலும் சேனல் பெயரையும், செய்தியாளர் பெயரையும் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள், கட்சி சேனல் நடத்துபவர்களிடம் பேச விரும்பவில்லை, யூடியூப் சேனல் செய்தியாளர்கள் யாரும் என்னுடைய செய்தியாளர் சந்திப்புக்கு வர வேண்டாம்
40 ஆயிரம் கேமரா வைத்திருந்தால்
. அவர்களை அலுவலகத்திற்கு விட வேண்டாம். 40 ஆயிரம் மதிப்பில் கேமரா வைத்திருந்தால் கேள்வி கேட்பீர்களோ? என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் கட்டி இருந்த ரபேல் வாட்சை செய்தியாளரிடம் கழற்றி கொடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு தெரிவித்ததோடு, ஒட்டு கேட்டும் கருவி இதில் இருக்கிறதா என்று இந்த வார்த்தை எடுத்துச் சென்று சோதித்துப் பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்
. அண்ணாமலையின் இந்த செயலால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், யாரிடமோ காசு வாங்கி கொண்டு மக்கள் ஐடிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். திமுக அமைச்சர் ஒருவரின் பாலியல் வீடியோ கடந்த ஆண்டில் வெளியானது , அதை 48 மணி நேரத்திற்கு பிறகு எந்த சேனலும் ஒளிபரப்பவில்லை.
பாவாடை நாடாவை அவிழ்த்து பார்ப்பேன் என சொன்னவர்கள் , ஒரு கட்சி தலைவியின் முடியை பிடித்து இழுத்தவர்கள்தான் திமுகவினர்” எனக் கூறினார்.