புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை - நாளை வெளியாகும் அறிவிப்பு?
புதிய கட்சி குறித்த அறிவிப்பை அண்ணாமலை நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் டெல்லி சென்றுள்ள அவர், அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாடு குறித்து விளக்கி 5 பக்க ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணாமலையை சமாதானம் செய்ய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசப்பட்டுள்ளது.

ஆனால், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மோடி உடன் சந்திப்பு
அண்ணாமலையின் பிறந்தநாளான இன்று தனிக்கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இன்னும் அண்ணாமலை டெல்லியிலே உள்ளார்.
இன்று, பிரதமர் மோடியை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர், நாளை தமிழ்நாடு திரும்பும் அவர், புதிய கட்சி குறித்த அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக அவர் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ள "We The Leaders" என்ற NGO மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை மாநிலம் முழுவதும் இந்த இயக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளார்.
அதன் பின்னர், அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சிகளை வழங்கி, இயக்கம் வலுவடைந்த பின்னர், முறையான புதிய அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan