காயத்ரி ரகுராம் விலகல்...செய்தியாளர்களை மிரட்டிய அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai
By Thahir Jan 04, 2023 07:23 AM GMT
Report

செய்தியாளர் சந்திப்பில்  கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் கடும் வாக்குவாதம் செய்த அண்ணாமலையால் பரபரப்பு

காயத்ரி ரகுராம் விலகல் குறித்து கேள்வியை செய்தியாளர்கள் முன் வைத்த போது பதில் உரிய பதில் அளிக்காமல் அங்கு கேள்வி கேட்ட புதிய தலைமுறை, ஜெயா டிவி செய்தியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Annamalai threatened journalists

நான் வாழ்த்துவேன் 

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, பெண் காவலரிடம் அத்துமீறல் செய்த திமுகவினரை தாமதமாக கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி பணியாளரை கைகளால் சுத்தம் செய்ய வலியுத்தியதாக குற்றசாட்டினார். அதாவது, ஊழியரை வெறும் கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ள கூறிய திமுக எம்எல்ஏ எபனேசர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து கொண்டியிருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

மேலும், கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவது எனது வாடிக்கை. என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவது நல்லது தான், அப்போதுதான் அது பேசும் பொருளாகும்.

பத்திரிகைகளின் குற்றச்சாட்டுக்கு எனது பதில் மவுனம் தான், கட்சியில் இருந்து யார் விலகினாலும் அதே பதில்தான் என்றார். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் குற்றசாட்டியிருந்தார்.