முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் - அண்ணாலை பகிரங்க சவால்..!
6 மணி நேரம் கமலாலயம் அலுவலகத்தில் இருப்பேன் தெம்பு,திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள் என அண்ணாமலை பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
சென்னை கமாலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் பேசிய அனைத்திற்கும் ஆதாரங்கள் உள்ளதாகவும், நீதிமன்றத்தில் உங்கள் வழக்கை சந்திப்பதற்கு வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தான் அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
தான் இன்னும் 6 மணி நேரம் கமலாலயம் அலுவலகத்தில் இருப்பேன் தெம்பு,திராணி இருக்கு அவுங்களுக்கு உண்மையில் புரூப் (Proof) இருந்தால் 6 மணி நேரத்தில் கமலாலயம் வந்து கைது செய்ய வேண்ம் என பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இல்லை என்றால் அவர்கள் பரப்பும் பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று தெரிவித்துள்ளார். திமுக அலுவலகத்தில் ஆர்.எஸ் பாரதி போன்று பெட்சீட் போட்டு துாங்கவில்லை என்றார்.
சுயமாக தனியாக தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார். நான் ஒரு தனி ஆள் என்றும் என்னை தொட்டு பாருங்கள் என்று ஆவேசமாக தெரிவித்தார்.
You May Like This