அண்ணன் கருத்து சரி தான்: சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணாமலை?
விழுப்புரத்தில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கி லாபத்தை ஈட்டுகின்ற நாடு தான் வளரும். மக்களை சோம்பேறியாக்கி கூலி கொடுப்பது என்பது மிக ஆபத்தான போக்கு.
வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்காக தனி பட்ஜெட்” என்று கேள்வியெழுப்பியிருந்தார். சீமானின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சீமான் கருத்தில் நியாயம் இருப்பதாக பேசியுள்ளார்.
சென்னிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை : 100 நாள் வேலைத் திட்டம் குறித்து சீமான் பேசிய கருத்தில் நியாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 100 நாள் வேலைத் திட்டம் குறித்து பா.ஜ.கவும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.