ஏ.ஆர்.ரகுமானை வைத்து அரசியல் செய்யக்கூடாது...அண்ணாமலை வேண்டுகோள்..!
இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசைக்கச்சேரியை வைத்து அரசியல் செய்யக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம்
அண்மையில் நடைபெற்ற இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றமடைந்ததோடு, பல வித துன்புறுத்தல்களுக்கும் ஆளாகினர்.
குறிப்பாக கூட்டநெரிசல், சாலையில் போக்குவரத்து நெரிசல் போன்றவை அதிகளவில் நடைபெற்றள்ளது. இதன் காரணமாக தற்போது, ஏஆர் ரகுமான் தாக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறார்.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட இடஞ்சல்களுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக ஏஆர் ரகுமான் தெரிவித்த நிலையில், அவர் மீது தற்போது வரை விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.
அரசியல் செய்யக்கூடாது
இந்நிலயில், கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து என குறிப்பிட்டு, தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர்.
அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நடந்த இடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் தனது வீடு உள்ளது என குறிப்பிட்ட அண்ணாமலை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திட்டமிடுதல் சரியாக இல்லை என்றும் அந்த வழியாக சென்ற முதல்வருக்கும், பொதுமக்களுக்கு காவல் துறை சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என குற்றம்சாட்டி, ஏ.ஆர்.ரஹ்மானை சுற்றி நடந்த விஷயங்களைத்தான் பாஜக குற்றச்சாட்டாக வைத்தது என கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.