அண்ணாமலை போராட்டம் நடத்துவது காமெடியாக உள்ளது - புகழேந்தி..!

BJP K. Annamalai
By Thahir May 31, 2022 05:00 PM GMT
Report

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துவது காமெடியாக உள்ளது என புகழேந்தி விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தனியார் ஓட்டலில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்;

அண்ணாமலை போராட்டம் நடத்துவது காமெடியாக உள்ளது - புகழேந்தி..! | Annamalai Struggle Is Comedy Pugazhendi

அப்போது பேசிய அவர்,அண்ணாமலை பெட்ரோல், டீசல் விலை குறைக்க போராட்டம் நடத்துவது காமெடியாக உள்ளது எரிப்பொருள் விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

மத்திய அரசின் ஆட்சியாளர்கள், இணை அமைச்சர் முருகன் மீதான எதோ பிரச்சனையால் மத்திய அரசிற்கு எதிராக அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.

செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களை 200,400,1000 ரூபாய் என பிச்சை கேட்க வந்தவர்களை போல நடத்துவதா,

மோடியை பிரதமராக்கியது மக்கள் என்றாலும் முக்கிய காரணமாக திகழ்ந்தது வடமாநில ஊடகங்கள் தான், இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத அண்ணாமலையை வண்மையாக கண்டிக்கிறேன்

ஜெயலலிதா, கலைஞர், எம்ஜிஆர் பத்திரிகையாளர்களை மதித்தனர். ஏன்? தமிழிசை, முருகன் போன்றோரும் கண்ணியம் காத்தனர் மனிதனை மனிதனாக மதிக்க பெரியார், அம்பேத்கார்,கலைஞர் போன்றவர்களை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி கொள்ளுங்கள் மாநில தலைவராக இருந்த முருகன் வேலோடு வந்தால், நீங்கள் அடிதடிக்காக கோலோடு வருகிறீர்கள் என்றார்.