தனிக் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை? நயினார் நாகேந்திரன் பளீச்!
அண்ணாமலை, பாஜகவில் தான் இருக்கிறார் என நயினார் விளக்கமளித்துள்ளார்.
தனிக் கட்சி
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ஜிஎஸ்டியைப் பொறுத்த அளவில் ஏற்கனவே 24 சதவீத வரியை 12 சதவீதமாகக் குறைத்து, தமிழக மக்கள் மட்டும் இல்லாமல் இந்திய மக்களுக்குக் குறைத்து இருக்கிறது பாஜக அரசு.
வாக்குத் திருட்டில் ஈடுபட்டுதான் மோடி வென்றார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளது எனக் கூறிய ராகுல் காந்தி, எந்த ஆதாரத்தை வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர்கள் காலத்தில் வாக்குத் திருட்டு செய்திருக்கிறார்கள்.
நாங்கள் வாக்குத் திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஜெயித்திருக்கும். அவர்கள் ஆளும் கட்சியாக வந்திருக்க முடியாது. விஜய் இதுவரை எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறார்.
நயினார் விளக்கம்
அரசியலுக்கு வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைத்தால் தமிழக மக்கள் எதை நினைத்து வாக்களிப்பார்கள் என்று சிந்தித்துப் பேச வேண்டும். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக சிலர் கூறுகிறார்கள்.
அண்ணாமலை எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர். இப்போதும் கட்சியில் இருக்கிறார். இது போன்ற சம்பவத்தைப் பரப்புவது ஊடகத்தின் வேலையா? திமுகவின் வேலையா? அவர்கள் கேட்கச் சொல்லி நீங்கள் கேட்கிறீர்களா? அந்த போஸ்டர் யார் ஒட்டினார் எனத் தெரியவில்லை.
ஓபிஎஸ் டிடிவியை அதிமுகவில் இணைப்பது குறித்து, தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அவர்கள் உட்கட்சிப் பிரச்சனைக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. கூட்டணிக்கு வந்தால் நாங்கள் சேர்த்துக்கொள்வோம்.
அரசியலில் நிரந்தர எதிரியும் நண்பரும் இல்லை. கொள்கை அளவில் யாரும் கூட்டணி சேரவில்லை. திமுகவிலும் கொள்கை அளவில் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளார்.