திமுக தான் எதிரி....அதிமுகவை ஓரங்கட்டுகிறாரா அண்ணாமலை..?

M K Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Oct 05, 2023 04:44 PM GMT
Report

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தான் எதிரி என குறிப்பிட்டு, திமுகவிற்கும் தங்களுக்கும் தான் போட்டி என கூறியிருப்பது பேசும் பொருளாக மாறியிருக்கின்றது.

அண்ணாமலை பேட்டி

கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், அக்கட்சியினை அழுத்தமாக அண்ணாமலை எதிர்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் தங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறினார்.

annamalai-stand-in-general-election-opposing-dmk

அதே நேரத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மிக பெரிய அரசியல் மாற்றத்தை பாஜக கொண்டு வரும் என அழுத்தமாக அவர் கூறிய நிலையில், பாஜக மறைமுகமாக அதிமுகவை மாநில அரசியல் களத்தில் இருந்து ஓரங்கட்ட பார்க்கிறதா? என்ற கோணத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளது.

வாக்கு வங்கிகள் என்னென்ன

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 3.66% வாக்குகளை பெற்றது. அதில் அதிமுகவின் பங்கு முக்கியமானது என்றாலும், அது இடங்களாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், சென்ற சட்டமன்ற தேர்தலில் 2.62% தேர்தலை அக்கட்சி பெற்றிருந்தது.

இதுவும் அதிமுகவின் கூட்டணியில் இருந்து தான் பாஜகவிற்கு வந்தது என்று கூறினாலும், தற்போது அண்ணாமலை வருகைக்கு பிறகு கணிசமான முன்னேற்றத்தை பாஜக தமிழகத்தில் பெற்றுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது நேரடியாக வாக்குகளாக பரிதிபலிக்குமா என்றால் அது கேள்விக்குறியான விஷயமே. கடந்த சில தேர்தல்களில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது பாஜகவின் கூட்டணி தான்.

annamalai-stand-in-general-election-opposing-dmk

அதனை அக்கட்சி முறித்துள்ள நிலையில், திமுக மீது அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளை அதிமுக பெறலாம். தமிழகத்தை பொறுத்தவரையில் மக்களிடம் ஊறிப்போயுள்ள அதனை மீறி பாஜக வளருவது பெரும் சவாலான ஒன்றே. அதிமுக சற்று பின்தங்கினாலும், மக்களுக்கு திமுக மீது அதிருப்தி வரும் வேளையில் அது அதிமுகவிடம் தான் மாறுமே தவிர பாஜகவிற்கு செல்லுமா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.

அதே நேரத்தில் திமுகவை எதிர்ப்பதன் மூலம் தங்களை வளர்த்து கொள்வதில் பாஜக தீவிரம் காட்டும் வேளையில், அக்கட்சி அதிமுகவின் வாக்கினை எளிதில் அறுவடை செய்து விடலாம் என்று கணக்கு போடுவதும் தவறானது தான். ஆனால் தற்போது அண்ணாமலை கூறுவதில் கருத்து ஒன்று ஆழமாக உள்ளது.

உருப்பெறுமா பாஜக..?

திமுகவின் எதிர்ப்பு அரசியலில் தான் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவை தலைவர்கள் மாறிய நிலையில், அக்கட்சியை உயிர்ப்புடன் வைத்துள்ளது எனலாம். தேமுதிக 2011-இல் அசுர வளர்ச்சியை பெற்றதும் இந்த போக்கில் தான் என்பதில் கேள்விகள் இருக்காது. அதனை தான் தற்போது பாஜக மும்முரமாக கையிலெடுத்துள்ளது. அந்த வகையில், அண்ணாமலையின் இந்த முடிவு சிறப்பான முன்னெடுப்பே.

annamalai-stand-in-general-election-opposing-dmk

ஆனால் அதே நேரத்தில் அக்கட்சி அதிமுக மீதும் தங்களது கவனத்தை சற்று வைத்திருக்கும் என்பதிலும் கேள்விகள் எழாது எனலாம். அடுத்த 7 மாதங்களில் கட்சி நிர்வாகிகள் பெரும் தாக்குதலை திமுக மீது முடுக்கி விடும் படி அண்ணாமலை கூறிய நிலையில், தொடர்ந்து அக்கட்சி மக்களை எவ்வாறு ஈர்க்கும்? எந்த மாதிரியான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் என்பதில் தான் அக்கட்சியின் வாக்குகள் எந்த அளவிற்கு எதிரொலிக்கும் என்பது தெரியும்.