கலா மாஸ்டருடன் சேர்ந்து அண்ணாமலை குத்தாட்டம் - வீடியோ வைரல்!
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இன்றுடன் அனைத்து கட்சி பிரச்சாரங்கள் நிறைவடைய உள்ளன. முக்கிய புள்ளிகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
அந்த வகையில் அரவக்குறிச்ச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, டேன்ஸ் மாஸ்டர் கலாவுடன் இணைந்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரத்தில், அரவக்குறிச்சி மக்களுக்காக தான் செய்யவிருப்பதை மக்கள் முன்னிலையில் பரப்புரை நிகழ்த்தினார் அண்ணாமலை. இதனையடுத்து, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றியும் எடுத்து மக்களுக்கு கூறினார்.

அப்போது, கலா மாஸ்டர் வாகனத்திலேயே டான்ஸ் ஆட ஆரம்பித்தார்கள். அப்போது கலா மாஸ்டருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டார். பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்கள் எல்லாரும் இவர்கள் டான்ஸ் ஆடுவதை பார்த்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
கலா மாஸ்டருடன் அண்ணாலை ஆடி டான்ஸ் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.