நான் தனிப்பட்ட முறையிலும் கவுதமியுடன் நிற்கிறேன் - அண்ணாமலை உறுதி
நடிகை கவுதமிக்கு பாஜக நிச்சயம் உதவுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி
நடிகை கவுதமி கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன்.
என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறித்து எனக்கு தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை உறுதி
இந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியது. தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, கவுதமி வெளியேறியது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “கவுதமி குற்றம்சாட்டிய நபர் பாஜகவின் எந்த பொறுப்பிலும் இல்லை. அவருடன் நானும் மூத்த நிர்வாகிகளும் பேசியது கிடையாது. இந்த விவகாரத்தில் கட்சி அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கவுதமியுடன் நிற்கிறேன்.
இதில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுதமியிடம் நான் பேசியிருந்தேன். கட்சியில் யாராவது குற்றவாளியை காப்பாற்ற முயற்சித்தாலும் அவர் குறித்த விவரத்தையும் என்னிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளேன். கவுதமி கட்சியில் தொடர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு பாஜக நிச்சயம் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.