அண்ணாமலையின் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிக்கலாமே? - பீட்டர் அல்போன்ஸ்

BJP K. Annamalai
By Thahir Jan 05, 2023 02:17 AM GMT
Report

நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபெருமானையே கேள்விகேட்ட மண் இந்தமண் என்பது பாஜகவுக்குப் புரியவேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.

நேற்று செய்தியாளர் சந்தின் போது, பாஜக தலைவர் அண்ணாமலை, அவரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களிடம், யாராக இருந்தாலும் சேனல் பெயரையும், செய்தியாளர் பெயரையும் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள், கட்சி சேனல் நடத்துபவர்களிடம் பேச விரும்பவில்லை, யூடியூப் சேனல் செய்தியாளர்கள் யாரும் என்னுடைய செய்தியாளர் சந்திப்புக்கு வர வேண்டாம்.

தான் கட்டி இருந்த ரபேல் வாட்சை செய்தியாளரிடம் கழற்றி கொடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு தெரிவித்ததோடு, ஒட்டு கேட்டும் கருவி இதில் இருக்கிறதா என்று இந்த வாட்சை எடுத்துச் சென்று சோதித்துப் பாருங்கள் என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிக்கலாமே? - பீட்டர் அல்போன்ஸ் | Annamalai Speech Peter Albonse Condolences

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ ஜனநாயகத்தின் மிக முக்கியமான செயல்பாடான பத்திரிக்கையாளர் சந்திப்பை “குழாயடிச்சண்டையாக” மாற்ற பாஜக தொடர்ந்து முயற்சிப்பதின் மர்மம் என்ன? கேள்விகளுக்கு பதில் இல்லையென்றால் கேட்டவரை கொச்சைப்படுத்துவது ஜனநாயகமா? பிரதமரைப்போல பத்திரிக்கையாளர் சந்திப்பையே அண்ணாமலை தவிர்க்கலாமே? கேள்வியே கேட்கமுடியாத, கேட்கக்கூடாத கட்சியாக தன்னை பாஜக தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்த முயல்வது புரிகிறது.

நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபெருமானையே கேள்விகேட்ட மண் இந்தமண் என்பது பாஜகவுக்குப் புரியவேண்டும். தமிழகம் அதனைப் புரியவைக்கும்! என பதிவிட்டுள்ளார்.