உதயநிதி படத்தை பார்க்க சொல்லாதீங்க : பாஜக அண்ணாமலை கிண்டல்

Udhayanidhi Stalin DMK BJP K. Annamalai
By Irumporai Dec 11, 2022 12:36 PM GMT
Report

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நேஷனல் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

  மெரினா மரப்பாலத்தை காணும்

இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, தூத்துக்குடி வடக்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதயநிதி படத்தை பார்க்க சொல்லாதீங்க : பாஜக அண்ணாமலை கிண்டல் | Annamalai Speech About Udhayanidhi Stalin

அப்போது விழாவில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை ஒரு படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றை காணும் என்பது போல மெரினாவில் மாற்றுதிறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாலத்தை காணவில்லை எனக் கூறினார். 

படத்தை பாக்க சொல்லாதிங்க

தொடர்ந்து பேசிய அண்ணாமலை , உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள்.,ஆனால் அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் இன்றையக்கு திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான். பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத நிலை உள்ளது. அதை வரும் பொங்கலுக்கு மக்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என பேசினார்.