போக்கு வரத்து விதிமீறல்; என்மேல் கேஸ் ஏதும் போட்றாதீங்க - கையெடுத்து கும்பிட்ட அண்ணாமலை!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது முதல் வாகன அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
அண்ணாமலை
அண்மையில் பிரபல யூடியூப் சானல் ஒன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பேட்டியெடுத்திருந்தது. அதில் நடிகை சுஹாசினி மணிரத்தினம் காரில் பயணித்தபடியே அண்ணாமலையை பேட்டியெடுத்தார். அப்போது சுகாசினி 'முதலில் நீங்கள் ஒட்டிய வண்டி எது? புல்லட் பைக் ஒட்டியிருக்கிறீர்களா? என்ற கேள்விகள் அண்ணாமலையிடம் கேட்டார்.
பேட்டி
அதற்கு பதிலளித்த அண்ணாமலை 'முதலில் நான் ஒட்டிய வாகனம் எனது அப்பாவின் 1987 மாடலான டிவிஎஸ் 50 (TVS 50). எனது அப்பா அந்த வண்டியை தங்கம் மாதிரி மிகவும் பத்திரமாக வைத்திருப்பார். எனது அப்பா புல்லட் (Bullet) பைக்கும் வைத்திருந்தார்.
அந்த புல்லட்டையும் நான் எனது சிறு வயதில் ஓட்டிப் பார்த்திருக்கிறேன் 'அதுக்குன்னு தயவு செஞ்சு இப்போ என்மேல கேஸ் ஏதும் போட்றாதீங்க , அப்போது என்கிட்டே லைசன்ஸ் எல்லாம் இல்லைங்க' என்று அண்ணாமலை சிரித்தபடியே கேமராவை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். மேலும் பேசிய அவர் 'எஸ்பி ஆனதிற்கு பிறகு உடுப்பியில் நான் பணிபுரிந்த இடத்தில் புல்லட் பைக் ஒன்று நின்று கொண்டிருந்தது.
நான் அந்த புல்லட்டை பற்றி கேட்டபொழுது, சார் இது எஸ்பிக்காக வாங்கிய புல்லட். இதை யாருமே ஒட்டுவதில்லை இது மிகவும் கனமானது என்று கூறினார்கள். நான் அதை ரிப்பயர் செய்து ஒரு 8 மாத காலமாக ஓட்டினேன். அதன் பிறகு ஒரு மீட்டிங் போய் வெளியில் வந்து புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை, ஊரே என்னை பார்த்தது. அதனால் புல்லட்டை விட்டு அம்பாசிடர் காரை சிறிது காலம் ஓட்டினேன் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.