விஜய் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை - அண்ணாமலை கேள்வி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஐய் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை அறிவுரை
புதுச்சேரியில், இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற தீபப் போராட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகனுக்கு 2 மனைவிகள் என்பதால் 2 முறை தீபம் ஏற்ற முடியுமா என்ற வாதத்தை வைத்துள்ளார். இதற்கு திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக விரிவுபடுத்தி அதில் பல்வேறு மாற்றங்களையும் செய்துள்ளது. இதனால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் அரசியலில் கம்முனு இருக்க கூடாது. இவ்வளவு பிரச்சினைகள் நடக்கும் போது விஜய் பேசாமல் இருந்தால் மக்கள் அவரை நம்பி எப்படி ஆட்சியை தருவார்கள்?
புதுச்சேரியில் நமது கூட்டணி ஆட்சியில் ஒரு எம்எல்ஏ சிறுபான்மையினர் என்பதற்காக பொறுப்பு கொடுக்கவில்லை என விஜய் பேசினார். அன்றைக்கு சிறுபான்மையினருக்காக பேசிய விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை" என கேள்வி எழுப்பியுள்ளார்.