DMK என்றால் டெங்கு, மலேரியா, கொசு...அண்ணாமலை கடும் விமர்சனம்

Udhayanidhi Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Sep 07, 2023 11:06 AM GMT
Report

 சனாதன விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் ஒழிய வேண்டுமென்றால் அது திமுக தான் என பதிவிட்டுள்ளார்.

சனாதன விவகாரம்

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா போன்ற சனாதனத்தையும் எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.

annamalai-slams-udhayanidi-stalin

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து பெரும் சலசலப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாஜகவினரும், இந்து சமயத்தை தீவிரமாக கடைபிடிப்பவர்களும், இதற்கு கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

அண்ணாமலை விமர்சனம்

இந்த சம்பவத்தில் அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து அமைச்சர் உதயநிதி மீது கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்து வருகின்றார்.

இதற்கிடையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில், தமிழகத்தில் ஒழியவேண்டுமென்றால் அது திமுக தான் குறிப்பிட்டு, DMK என்ற எழுத்துக்கு டெங்கு, மலேரியா, கொசு என குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.