மாணவன் உயிரிழப்பு...காரணமே முதல்வர் முக ஸ்டாலின் தான்...அண்ணாமலை கண்டனம்

M K Stalin DMK BJP K. Annamalai
By Karthick Aug 25, 2023 10:15 AM GMT
Report

விளையாட்டு போட்டியை துவக்கிவைக்க நான்கு மணி நேரம் காலதாமதமாக முதல்வர் வந்ததன் காரணமாக தான் மாணவர் ஒருவரின் உயிர் பறி போயிருக்கிறது என அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அண்ணாமலை கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரங்கம்பாடி தாலுக்காவில் விளையாட்டு வீரர் ரிஷி பாலன் உயிரிழுந்துள்ள நிலையில், மாணவர்களை, நான்கு மணி நேரமாக மைதானத்தில் வெயிலில் நிறுத்தி வைத்ததன் காரணமாகவே தான் மாணவன் உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மாணவன் உயிரிழப்பு...காரணமே முதல்வர் முக ஸ்டாலின் தான்...அண்ணாமலை கண்டனம் | Annamalai Slams Stalin For Student Death

மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பொறுப்பின்மையால், கூலி வேலை செய்யும் ஏழைப் பெற்றோர்களின் ஒரே நம்பிக்கை சிதைக்கப்பட்டிருக்கிறது என்றும், மாவட்டத்தில் வேறொரு நிகழ்ச்சிக்கு வரவழைத்து மாணவர்களை நான்கு மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைப்பது என்ன விதமான மனநிலை? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, ஏழை எளிய மாணவர்கள் என்றால் அத்தனை மலிவாகிவிட்டதா தமிழக அரசுக்கு? என கடுமையாக விமர்சித்துள்ளார்.   

கடுமையாக கண்டிக்கிறேன்

இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பொறுப்பான தமிழக அரசு, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்த அனைவரையும் வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், உடனடியாக இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு, தமிழக அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.