எங்க போட்டியிட்டாலும் தோற்க தான் போகிறார்...சீமானுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை
சீமான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், தோற்க தான் போகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
சீமான் சவால்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. முக்கியமாக பாஜக கட்சி வரும் தேர்தலில் எப்படியேனும் வென்றிட வேண்டும் என பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் ராமநாதபுர தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அண்மையில் கட்சி உறுப்பினர் திருமண விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இது குறித்து பேசும் போது, தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் தான் நிச்சயமாக அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை பதிலடி
இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், தனக்கு சீமான் மீது நல்ல மதிப்பிருக்கிறது என குறிப்பிட்ட அவர், ஆனால் சீமான் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தான் போகிறார் என கூறி, எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவேன் என கூறும் சீமான், வாரணாசியிலோ அல்லது வதோத்தராவிலோ போய் போட்டியிடலாமே பதிலடி கொடுத்துள்ளார்.