சீட்டுக் கட்டு போல சரிகிறது போலியான சித்தாந்தம்..! அண்ணாமலை விமர்சனம்
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுதலையை ரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலியான சித்தாந்தம்
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.
ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) December 19, 2023
ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக…
ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
21-இல் தண்டனை
தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு கீழமை நீதிமன்றம் அளித்திருந்த விடுதலையை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அவரின் தண்டனை வரும் 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.