கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு

M K Stalin K. Annamalai
By Karthikraja Oct 17, 2025 03:30 PM GMT
Report

ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம் அமைத்தது தொடர்பாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம்

இன்று சட்டமன்றத்தில், ஆணவப் படுகொலையைத் தடுக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai Slams Mk Stalin For Form Commission

இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் தெரிவித்தார்.

இவ்வாறு குழு அமைத்தது குறித்து முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

அமைச்சர் போல் பேச வேண்டும்; குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது - அன்புமணி விமர்சனம்

அமைச்சர் போல் பேச வேண்டும்; குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது - அன்புமணி விமர்சனம்

அண்ணாமலை விமர்சனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021 ஆம் ஆண்டிலிருந்து, 2023 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது. 

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai Slams Mk Stalin For Form Commission

இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.

இந்த நிலையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்அவர்கள்.

ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள்.

வீணாகும் மக்கள் வரிப்பணம்

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்? 

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai Slams Mk Stalin For Form Commission

இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?" என தெரிவித்துள்ளார்.