இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடக்கம்; கொந்தளித்த அண்ணாமலை

Trisha K. Annamalai
By Karthikraja Nov 23, 2026 10:51 AM GMT
Report

annamalai slams for start ilaiya puratchi thalaivi trisha peravai: இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள அமைப்பிற்கு We The Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை

தவெக தலைவர் விஜய் முதல்வரான பின்னர், நடிகை திரிஷாவும் விரைவில் அரசியலுக்கு வருவார் என பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடக்கம்; கொந்தளித்த அண்ணாமலை | Annamalai Slams For Start Trisha Peravai

இந்த அமைப்பின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால் வெளியிட்ட லோகோவில், "பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக" என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை விமர்சனம் 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய We The Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இதனை வெட்கக்கேடு என விமர்சித்துள்ளார்.

இதில் பேசிய அவர், இன்னைக்கு திருநெல்வேலியில் இளைய புரட்சித்தலைவி என்ற பெயரில் மாமன்றம். இதெல்லாம் வெட்கக்கேடு. எவ்வளவு படித்த மக்கள் வாழும் ஊர். இன்னும் யார் போட்டோவை பாக்கெட்டில் வைத்து எப்படி சுற்றிக்கொண்டிருக்கிறோம். 

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடக்கம்; கொந்தளித்த அண்ணாமலை | Annamalai Slams For Start Trisha Peravai

இந்த கலச்சாரத்தை யார் கொண்டு வந்தது? திராவிட கட்சிகள் கொண்டு வந்த கலாச்சாரம், 2 படம் நடித்தால் அடுத்த தலைவர், 10 படம் நடித்தால் அடுத்த எம்.ஜி.ஆர், எதை எடுத்தாலும் சினிமா வசனம், ரீல்ஸ்.

இதுதான் தமிழ்நாடா? 3 நாள் படத்தின் வளர்ச்சி தான் தமிழ்நாட்டு மக்களின் சக்தியையும், வளர்ச்சியையும் தீர்மானிக்குதா?

மாற்றம் வேண்டும் என ஒன்றரை கோடி மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்தினார்கள். ஆனால் அதே அரைத்த மாவை தானே அரைக்கிறோம். தமிழ்நாட்டில் மக்களை மையப்படுத்த கூடிய புதிய அரசியல் தேவைப்படுகிறது" என பேசினார்.