முதல்வராக நீடிக்க உரிமை இருக்கிறதா? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

Tamil nadu BJP K. Annamalai Chief Minister of Tamil Nadu Sivagangai
By Karthick Jul 28, 2024 10:30 AM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

சிவகங்கை பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வருமாறு,

ANNAMALAI K TN BJP

சிவகங்கை @BJP4Tamilnadu கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள், நேற்று இரவு, சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் அதிர்ச்சியளிக்கிறது!! அண்ணாமலை

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் அதிர்ச்சியளிக்கிறது!! அண்ணாமலை

இந்தக் கடினமான நேரத்தில், @BJP4Tamilnadu அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது.

தார்மீக உரிமையில்லை

அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ANNAMALAI K TN BJP

காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத்தனத்தைத் தொடரும் திரு. ஸ்டாலின்,


தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும். இவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.