அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்லி தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை - அண்ணாமலை

ADMK BJP K. Annamalai Sellur K. Raju
By Karthick Aug 04, 2023 04:22 AM GMT
Report

தன்னை குறித்து விமர்சித்திருந்த அதிமுகவின் செல்லூர் ராஜுவிற்கு பதில் சொல்லி தன்னை தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

அருமை தெரியவில்லை

எடப்பாடி பழனிசாமியின் அருமை பிரதமர் மோடிக்கு தெரிந்த அளவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரியவில்லை என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்திருந்தார்.

அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்லி தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை - அண்ணாமலை | Annamalai Slams Admk Sellur Raju

 என் மக்கள் என் மண் நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலை செல்லூர் ராஜுவின் இந்த கருத்திற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலை பதிலடி

யார் பேசினால் யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என தரம் உள்ளது என குறிப்பிட்டு, சில பேர் தங்களை அரசியல் விஞ்ஞானிகளாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி தன்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என கூறினார்.

அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்லி தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை - அண்ணாமலை | Annamalai Slams Admk Sellur Raju

மேலும் தனக்கு எந்த தலைவரின் ஒப்புதலும் தேவையில்லை என குறிப்பிட்டு தங்களுக்கு மக்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே போதும் என அண்ணாமலை பதிலளித்து சென்றார்.