என்னை கைது பண்ணா விளைவு வேற மாதிரி இருக்கும்; அது அவர்களுக்கும் தெரியும் - அண்ணாமலை காட்டம்!
என்னை கைது செய்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' மூன்றாம் கட்ட நடை பயணத்தை துவங்கி உள்ளார். திருச்சி, மணப்பாறை சட்டசபைத் தொகுதியிலிருந்து தொடங்கியுள்ளது.
அப்போது பேசிய அவர், மணப்பாறை முறுக்குக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்போருக்கு தெரியும் மோடி ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவுக்கு எவ்வளவு மரியாதை கிடைத்துள்ளது என்று மோடி இந்தியை திணிக்கிறார் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை
ஆனால் அவர் தமிழைத் தான் திணிக்கிறார் என்று கூறும் அளவுக்கு நாடு முழுவதும் உலகம் முழுவதும் தமிழை பரப்பி வருகிறார். 4வது தலைமுறையாக திமுக தமிழகத்தில் ஆட்சி செய்கிறது. நாடு முழுவதும் குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் தான் இண்டியா கூட்டணியில் சேர்ந்துள்ளனர்.
அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் பிரதமர் ஆசை உள்ளது. தமிழகத்தில் 90 லட்சம் பேர் குடிகாரர்களாக இருக்கின்றனர். மது மூலம் கிடைக்கும் வருமானம் திமுகவினருக்கு தான் அதிகம் செல்கிறது. அரசியல் மூலம் கோடிகோடியாய் சேர்த்த திமுக அமைச்சர்களிடம் தான் வருமான வரி அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது.
யாத்திரை துவங்கிய போது என்னுடன் இருந்தவர்களை எல்லாம் போலீசார் கைது செய்துள்ளனர். என்னையும் கைது செய்ய முயற்சிப்பார்கள். என்னை கைது செய்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.