சிங்கம் பட பாணியில் கண்டம் விட்டு கண்டம் போய் குற்றவாளியை தூக்கிக்கொண்டு வந்த அண்ணாமலை - திக் திக் நிமிடங்கள்!
காவல் துறை அதிகாரியாக இருக்கும்போது குற்றவாளியை கைது செய்த நிகழ்வை குறித்து அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
பாஜக சார்பில் ஊழலுக்கு எதிராக 'என் மண்,என் மக்கள்' என்ற பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இந்த யாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்கியது. இது இறுதியாக சென்னையில் முடிவடைய உள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அண்ணாமலை செல்ல உள்ளார். அந்த வகையில் அண்ணாமலை இப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளார். இந்நிலையில் அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தான் காவல் துறை அதிகாரியாக இருக்கும்போது குற்றவாளி ஒருவரை கைது செய்த நிகழ்வைக் குறித்து பேசியுள்ளார்.
சேஸிங் செய்து பிடித்த அண்ணாமலை
அந்த பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது 'கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கொண்டு ஒரு குற்ற சம்பவத்தை செய்தார். அந்த குற்றவாளியை பிடிக்க முயன்றபோது வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அதற்காக மொரோக்கோ சென்று அங்குள்ள விமான நிலையத்தில் சேஸிங் செய்து குற்றவாளியை பிடித்து நான் கைது செய்தேன். அப்போது அந்த குற்றவாளி என்னிடம் "நீதானே அண்ணாமலை? உன்ன வெளிய வந்து பாத்துக்குறேன் என்று சொன்னார். அவர் சொன்னதை கேட்டபோது எனக்கு பயம் வரவில்லை சந்தோஷப்பட்டேன். நான் அந்த குற்றவாளிக்கு பதில் கொடுத்தேன் "எங்க ஒளிஞ்சாலும் கடைசீல நாங்க வந்து புடிச்சோம் பாத்தல்ல" என்று கூறினேன் .
மேலும் இது ஒரு வருட ஆப்பரேஷன். அந்த குற்றவாளி இப்போதும் கர்நாடகா ஜெயிலில் உள்ளார். இந்த சம்பவம் இந்திய சரித்திரத்திலேயே செய்யாமல் ஒரு மாநில காவல்துறை கடல் தாண்டிப் போய் குற்றவாளியை தூக்கிக்கொண்டு வந்த முதல் ஆப்பரேஷன் இதுதான்.
என்னுடைய வாழ்க்கையிலேயே என்றும் மறக்கமுடியாத வெளியே சொல்ல முடியாத ஒரு நெகிழ்வான தருணம் அதுதான் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.