சின்மயி புகார்; வைரமுத்துக்கு ஒரு நியாயமா? அதுக்கெல்லாம் கைது பண்ணமுடியாது - அண்ணாமலை காட்டம்
குற்றத்திற்காக யாரும் கைது செய்ய முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வைரமுத்து
மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் சென்றார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கவிப்பேரரசு வைர முத்துவின் மீது 19 வழக்குகள் உள்ளது. அவருக்கு வலது புறம் இடது புறம் இன்றைக்கு யார் உள்ளனர்? மு.க.ஸ்டாலின் கூட உள்ளார். பாடகி புகார் அளித்தும் அவர் மீது வழக்கு எதுவும் பதியவில்லை. குற்றத்திற்காக யாரும் கைது செய்ய முடியாது.
அண்ணாமலை கேள்வி?
மல்யுத்த வீரர்கள் குற்றச்சாட்டிற்கு வழக்கு பதியப்பட்டு விசாரணை உள்ளது.இந்தியாவில் அனைவரும் பேமஸ் தான். என்ன விஷயம் செய்தாலும் அந்த விஷயத்தை நாம் திரும்ப பெற முடியாது இந்த விஷயம் மல்யுத்தம் வீராங்கனைகளுக்கும் பொருந்தும்.
உச்ச நீதிமன்றத்தில் குறித்த கால அவகாசத்துடன் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம்முடைய வீராங்கனைகளுக்கு யாரின் மீது நம்பிக்கை வரும்.
இதே நியாயத்தை திமுகவை பார்த்தும் வைரமுத்துவை பார்த்தும் ஊடக நண்பர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். வைரமுத்துக்கு ஒரு நியாயம்? டெல்லியில் உள்ள வீராங்கனைகளுக்கு ஒரு நியாயமா? எனக் கேட்டுள்ளார்.