`குரங்கு மாதிரி சுத்தி சுத்தி வரீங்க'- செய்தியாளர்களை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

BJP K. Annamalai
By Thahir Oct 28, 2022 02:09 AM GMT
Report

"குரங்கு மாதிரி சுத்தி சுத்தி வரீங்க" என்று செய்தியாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் 

தமிழுக்கு திமுக முடிவுரை எழுதுவதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இதன் பின்னர் மதிய சாப்பிட்டிற்கு சென்ற அண்ணாமலை மீண்டும் வெளியே வந்தார். அப்போது, செய்தியாளர்களை அவரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து கேட்டனர்.

ஆவேசமாக செய்தியாளர்களை விமர்சித்த அண்ணாமலை 

இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, "மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டு போனேன். மரியாதையாக நின்றேன். நீங்கள் எல்லாேரும் சாப்பிடுங்க என்று சொல்லிட்டு போனேன்.

ஊர்ல நாய், போய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்கிறதுக்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க" என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றதோடு, அவர்களை தரக்குறைவாக அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.