விவாத களமான ட்விட்டர்.. அனலாய் பறந்த அண்ணாமலை vs செந்தில் பாலாஜி ட்விட்டுகள் .. நடந்தது என்ன?
ஒரு காலத்தில் கருத்து மோதல்கள் எல்லாம் தொலைகாட்சிகளில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும், ஆனால் தற்போது ட்விட்டர் பேஸ்புக் என அரசியல் தலைவர்களின் கருத்து மோதல் பேசு பொருளாக உள்ளது.
அந்த வகையில் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவுகள் தான் ட்ரெண்டிங் என கூறலாம், இந்த ட்ரெண்டிங்கிற்கு காரணம் என்ன வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மின்வாரியத் துறையில் முறைகேடு நடப்பதாக கூறியிருந்தார்,
தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, 'முறைகேடு' புகாரை முன்வைத்தார்.
அதில், தற்போது நலிவடைந்துள்ள நிலையில் உள்ள ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, ரூ. 5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழக மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
Hope the EB Min of Tamil Nadu can understand what we are talking about?
— K.Annamalai (@annamalai_k) October 20, 2021
The 5 ‘consultants’ sitting in his chennai home knows where is this 4% collected & kept!
This week - Thermal.
Next week - Solar.
The week after - the ‘big’ company that is getting readied! https://t.co/INEdeI4xhD pic.twitter.com/qbGVvXolae
ஆளும் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காக தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது. எந்த நிறுவனம், எந்த அமைச்சர் என்ற பெயரை, தற்போது வெளியிட விரும்பவில்லை.
திரும்பவும் 2006 - 11 பாதைக்கு போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி போகும்போது, பா.ஜ.கவுக்கு வேறு வழியில்லை, ஒப்பந்தம் பேச்சு குறித்து எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்' என்று பேசியிருந்தார்.
அதோடு, ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், `தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ. 29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன?.
கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்ய பட்டுள்ளது!
— K.Annamalai (@annamalai_k) October 20, 2021
உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை! #ResignEBMin
1 MWh - INR 20,000
1000 KWh is equal to 1 MWh.
1 KWh (1000 wats) is 1 Unit.
1 unit = INR 20. pic.twitter.com/GgFhDRmaKb
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
[
மேலும், சில ஒப்பந்ததாரர்களின் பெயர்களையும், அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் தொடர்பாகன புகைப்படடம் உள்ளிட்டவற்றை பகிர்ந்த அவர், கூடவே, இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார்,என்று கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலையில் அந்த ட்வீட் பதிவுக்கு பதில் கூறும்விதமாக ட்வீட் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி:
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல்.
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், (1/4) pic.twitter.com/sQu1KHbjAL
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 20, 2021
திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் ரூ. 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும்
. இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15,541 கோடி நிலுவையில் இருந்தது.
செப் 24 - அக் 19 வரை பயன்படுத்திய மின்சாரம் 6200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20/-க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ.20/-க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி.யூனிட்கள். (1/3)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 20, 2021
அக். 1 ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை' என்று பதில் கூறினார்.
ஆனாலும் சளைக்காத அண்ணாமலை, ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் அதில் :
கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட, 5 மடங்கு இது கூடுதலான விலை' என்று பதிவிட்டு, அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
Anna.
— K.Annamalai (@annamalai_k) October 20, 2021
More proof from your own @arivalayam party!
?. https://t.co/vSlF2Az6OY pic.twitter.com/sldDM5nByd
அதோடு, தன்னுடைய அடுத்த ட்வீட்டில், செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசிய பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டார் அண்ணாமலை.
இன்னொருபக்கம், அதற்கு எதிராக தனது ட்வீட்டை தொடர்ந்த செந்தில் பாலாஜி, 'இந்திய மின்சந்தையில் அக்டோபர் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ. 1.99 /- யூனிட். அதிகப்பட்ச விலை ரூ. 8.50/- யூனிட், சராசரி ரூ. 6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸ் அப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்துகொள்ளவும்'
1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு திரு. அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத்துக்காக, TANGEDCOனால் 30/3/2012 அன்று (1/5)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 21, 2021
மேலும், 1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு திரு. அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது என கிண்டல் செய்துள்ளார்.
இவ்வாறாக அண்ணாமலை, செந்தில் பாலாஜி முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதில் பதிவுகள் என ட்விட்டர் தளம் விவாத களமாக மாறியுள்ளது ஆனால் இங்கு நடுவர்களாக உள்ள இணைய வாசிகள் தங்கள் பதிவுகளை கூறி வருகின்றனர்.